/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மங்கலம் சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகை அமைப்பு
/
மங்கலம் சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகை அமைப்பு
ADDED : டிச 12, 2024 05:08 AM

தினமலர் செய்தி எதிரொலி
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் சென்டர் மீடியனில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டது.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியில் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியூர் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் முகப்பு பகுதியில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்களில் சிக்கி வந்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் இப்பகுதியில் விபத்துக்களை சந்தித்தன.
இந்நிலையில், சென்டர் மீடியனால் ஏற்படும் விபத்து குறித்தும், எச்சரிக்கை பலகை பொருத்த வலியுறுத்தியும், நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சென்டர் மீடியன் முகப்பு பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை அமைத்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் சோலார் சிக்னல் சிவப்பு விளக்கு பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.