/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாக்டர்களை நியமிக்கக் கோரி போஸ்டர் போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை

ADDED : செப் 29, 2024 05:10 AM
தொண்டி: தொண்டி அரசு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிக்கக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
பெருமானேந்தல், புதுக்குடி, மகாசக்திபுரம், வேலங்குடி, சின்னத்தொண்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று ம.ம.க., சார்பில் தொண்டியில் ஆங்காங்கே சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், மருந்தாளுநர் இல்லை.
ஏழை, எளிய மக்கள் அவதி. மக்கள் நலனில் அக்கறை காட்டு. உடனே போதிய மருத்துவர்களை நியமனம் செய். இல்லையேல் தொடரும் போராட்டம் என்று கூறப்பட்டுள்ளது.