/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் வெடி வைத்து மீன் பிடிக்கப்பட்டதா
/
தொண்டியில் வெடி வைத்து மீன் பிடிக்கப்பட்டதா
ADDED : ஜூன் 20, 2025 11:42 PM

தொண்டி: தொண்டியில் வெடி வைத்து மீன்பிடிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மரைன் போலீசார் சோதனை செய்தனர்.
தடை காலம் முடிந்ததால் தொண்டியில் மீனவர்கள் வழக்கமாக மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெடி வைத்து மீன்பிடிக்கப்பட்டு வருவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொண்டி மீன் வளத்துறையினர், மரைன் போலீசார் மற்றும் உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சென்று படகுகளை ஆய்வு செய்ததில் 150 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
அந்த மீன்கள் வெடி வைத்து பிடிக்கபட்டதா என உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மீன்கள் குழி தோண்டி அழிக்கப்பட்டது. நேற்றும் இதே போல் வெடி வைத்து மீன் பிடிப்பதாக தகவல் கிடைத்தது. உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆனால் அந்த மீன்களை ஆய்வு செய்ததில் வெடியால் மீன்கள் இறந்ததற்கான தடயம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

