ADDED : ஆக 09, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்த மாணவிகள் திருவாடானையில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு அக்கிராமத்திலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்ற போது மரங்களிலிருந்து கும்பலாக பறந்து வந்த குளவிகள் கடித்தது.
இதில் இரண்டு மாணவிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று அப்பகுதி மரங்களில் கூடு கட்டியிருந்த குளவிகளை அழித்தனர்.திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நாணல் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற சிலர் அப்புற்களுக்கு தீ வைத்தனர். காற்று வேகம் அதிகமாக இருந்ததால் விபத்து அபாயம் ஏற்பட்டது. திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.