/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள்: தொற்று நோய் பரவ வாய்ப்பு
/
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள்: தொற்று நோய் பரவ வாய்ப்பு
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள்: தொற்று நோய் பரவ வாய்ப்பு
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள்: தொற்று நோய் பரவ வாய்ப்பு
ADDED : ஜன 14, 2025 08:01 PM

முதுகுளத்துார்:
முதுகுளத்துார் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஊசி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.
இங்கு பயன்படுத்தப்படும் ஊசி, மருந்து பாட்டில் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கால்நடை மருத்துவமனை கட்டடத்தின் அருகே கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இடத்தில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர். திறந்தவெளியில் கிடப்பதால் கால்நடைகள் சாப்பிடும் நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.