ADDED : செப் 21, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு கடலாடி முக்குரோடு அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காக மணல் மூடைகள் பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மணல் மூடைகள் சேதமடைந்து வீணாகிறது.
எனவே சேதமடைந்த மணல் மூடைகளை பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.