/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் கலுங்கில் வீணான தண்ணீர் அடைக்கப்பட்டது
/
கண்மாய் கலுங்கில் வீணான தண்ணீர் அடைக்கப்பட்டது
ADDED : ஜன 02, 2025 04:46 AM

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாய் கலுங்கு சேதமடைந்து வீணான தண்ணீரை பணியாளர்கள் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருவெற்றியூரில் பொதுபணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தேக்கப்படும் நீரால் 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 2018 ல் குடிமராமத்து செய்யப்பட்டது. கண்மாயில் நீர் தேங்கும் வகையில் இரண்டு கலுங்குகள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள கலுங்கு சேதமடைந்து கண்மாய் நீர் வெளியேறியது.
திருவெற்றியூர் விவசாயிகள் கூறுகையில், குடிமராமத்து பணியின் போது மேற்கு பகுதியில் கலுங்கு நன்றாக சீரமைக்கபட்டது. ஆனால் கிழக்கு பகுதியில் உள்ள கலுங்கை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் கலுங்கு சேதமடைந்து மழை நீர் வெளியேறுகிறது.நாளுக்கு நாள் விரிசல் ஏற்படுவதால் இன்னும் சில நாட்களில் முற்றிலும் சேதமடைந்து கண்மாய் நீர் முழுமையாக வெளியேற வாய்ப்புள்ளது என்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.
இதன் எதிரொலியாக திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து கலுங்கிலிருந்து வெளியேறிய நீர் அடைக்கப்பட்டது.