/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி ஒன்றியத்தில் வீணாகிய ஜல்ஜீவன் திட்டம்
/
திருப்புல்லாணி ஒன்றியத்தில் வீணாகிய ஜல்ஜீவன் திட்டம்
திருப்புல்லாணி ஒன்றியத்தில் வீணாகிய ஜல்ஜீவன் திட்டம்
திருப்புல்லாணி ஒன்றியத்தில் வீணாகிய ஜல்ஜீவன் திட்டம்
ADDED : ஜன 08, 2024 11:57 PM

திருப்புல்லாணி ; மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஏழு ஊராட்சிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் முறையான அதிகாரிகளின் ஆய்வு இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் உள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பொது மக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் மூன்று முதல் ஐந்து மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வீடுகள் தோறும் அனைவருக்கும் பைப்லைன் இணைப்பு வழங்கப்பட்டு வெண்கலத்தால் ஆன திருகு பைப்புகள் பதிக்கப்பட்டன.
ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் உரிய வழிகாட்டுதலை செய்யாமல் பெயரளவிற்கு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதால் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் உரிய முறையில் பொதுமக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் திருப்புல்லாணி ராமச்சந்திரன் கூறியதாவது: திருப்புல்லாணியில் செட்டிய தெரு, தெற்கு தெரு, வேப்பங்குளத்து தெரு, அக்ரஹாரம், நான்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்திற்கான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அவற்றிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் மூன்று ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளது.
பெரும்பாலான திருகு பைப்புகள் மாயமானது. அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்து தர வேண்டும்.
தண்ணீரை குடம் ரூ.7க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதேபோன்று இதர ஊராட்சிகளிலும் முறையாக செயல்படுத்த வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.