/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்
/
நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்
ADDED : மே 22, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: பெரியப்பட்டினம் அருகே வண்ணாங்குண்டு அரசு நுாலகம் அருகே பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால்நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.
வண்ணாங்குண்டு கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அதிகளவு குப்பை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே வண்ணாங்குண்டு ஊராட்சி நிர்வாகம் வாசகர்களுக்கு இடையூறாக உள்ள கழிவு நீரை அகற்றவும், தேங்கும் குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.