ADDED : மார் 27, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: - ரெகுநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நீர் மோர், தர்ப்பூசணி உள்ளிட்ட குளிர் பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் கிஷோர் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான ஹிந்து முன்னணி தொண்டர்கள் பங்கேற்று சேவையில் ஈடுபட்டனர்.