ADDED : அக் 23, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார், பிச்சங்குறிச்சி, சீனாங்குடி, மேட்டு சோழந்துார், வட வயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்யப்பட்ட பின்பு பருவமழை இல்லாததால் நெல் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் சோழந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
பெரும்பாலான வயல்களில் உள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கு வழியின்றி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வயல்களில் தேங்கும் மழை நீரால் நெற்பயிர்கள் முளைப்பது கேள்விக்குறியாக உள்ளது. கனமழை பெய்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.