/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுவடைக்கு தயாரான நெல் வயலில் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றம்
/
அறுவடைக்கு தயாரான நெல் வயலில் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றம்
அறுவடைக்கு தயாரான நெல் வயலில் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றம்
அறுவடைக்கு தயாரான நெல் வயலில் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றம்
ADDED : பிப் 01, 2025 04:59 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் பாசனப் பகுதிகளான இருதயபுரம், பெரியார் நகர், பெருமாள்மடை, பிச்சனார் கோட்டை, நெடும்புலி கோட்டை, பெத்தார் தேவன் கோட்டை, நோக்கன்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், பெரும்பாலான வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் நெற்கதிர்கள் தண்ணீரில் பாதிப்படைந்துள்ளன.
இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் வயல்களில் உள்ள தண்ணீரை இருதயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் ஆயில் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் விவசாயத்தில் ஏக்கருக்கு பல ஆயிரங்களை செலவு செய்துள்ள நிலையில் அறுவடை நேரத்திலும், தண்ணீரை வெளியேற்றுவதற்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.