/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் குளங்களில் குறைந்து வரும் தண்ணீர்
/
கண்மாய் குளங்களில் குறைந்து வரும் தண்ணீர்
ADDED : ஜூன் 11, 2025 11:15 PM
ஆர்.எஸ்.மங்கலம்:
கண்மாய், குளங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வறட்சியால் குறைந்துஉள்ளதால் மீன்கள் பிடிப்பதில் பொதுமக்கள்ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட 200க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களிலும், மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக பாதி அளவு தண்ணீர் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக தொடர் வறட்சியால் நிலவும் கடும் வெப்பத்தால் பெரும்பாலான கண்மாய், குளங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வற்றியுள்ளது. குறிப்பாக ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் மற்றும் பெரிய கண்மாயின் கீழ் உள்ள 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களிலும் தேங்கி இருந்த தண்ணீர் வற்றியுள்ளது.
இதனால் கண்மாய் நீரில் வளர்ந்து வந்த மீன்களை துாண்டில் மற்றும் மீன் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் பாசன விவசாயிகள் சார்பில் கண்மாய் மீன்களை குறிப்பிட்ட தொகைக்கு மொத்தமாக ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.