/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீர் குழாய் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
தண்ணீர் குழாய் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : அக் 15, 2024 05:04 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி 6--வது வார்டில் தண்ணீரில் துர்நாற்றுத்துடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பேரூராட்சி பணியாளர்கள் தண்ணீர் குழாய்களை சரிசெய்தனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி 6--வது வார்டு செல்லிஅம்மன் கோவில் தெரு, பஜார் தெரு, ஊரணி தெரு உட்பட 5க்கும் மேற்பட்ட தெருக்களில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்காக பேரூராட்சி சார்பில் தினந்தோறும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சில நாட்களாக தண்ணீரில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் பணியாளர்கள் செல்லி அம்மன் கோயில் கழிவுநீர் கால்வாய் அருகே தண்ணீர் குழாயில் வால்வில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்தனர்.