/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் வரும் வெள்ள நீர் கடலுக்கு செல்லும் அவல நிலை நீர் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம்

ADDED : நவ 05, 2024 05:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் காருகுடி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுஉள்ள தடுப்பணையில் இருந்து ஷட்டர் மூலமாக கடலுக்கு செல்லும் வகையில் திருப்பப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுவாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீர் ஆற்றின் வழியாக வந்து காருகுடியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பெரிய கண்மாய் செல்லும் பகுதிக்கு ஷட்டர் அமைத்து திறக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்நிறைந்த பின்னர் தடுப்பணையில் இருந்து கடலுக்கு செல்லும் வகையில் திருப்பி விடப்படும். ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதயில் 3.5 அடி உயரம் மட்டுமே நீர் தேங்கியுள்ள நிலையில் காருகுடி தடுப்பணையிலிருந்து கடலுக்கு செல்லும் ஷட்டர் பகுதியிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை நேரத்திலாவது இது போன்ற பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து அலட்சியமாக இருந்தால் மழை வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடலுக்கு செல்லும் நீரை அடைத்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்நிறைய வைக்க வேண்டும்.