/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரதிநகரில் குடிநீர் தட்டுப்பாடு
/
பாரதிநகரில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : பிப் 21, 2024 11:06 PM
திருவாடானை : திருவாடானை அருகே பாரதிநகரில் கடந்த 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லுார் ஊராட்சி பாரதிநகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
பாரதிநகர் 9வது தெரு மக்கள் கூறியதாவது:
பாரதிநகர் புறநகர் பகுதியாக உள்ளது. குடிநீர் சப்ளை இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஊருணியில் தேங்கியிருக்கும் நீரை எடுத்து வந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம்.
தனியார் வாகனத்தில் வரும் தண்ணீரை குடம் ரூ.10க்கு வாங்குகிறோம். பொருளாதார வசதியில்லாதவர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். குடிநீர் சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.