/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டிவயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
/
கட்டிவயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 05, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கட்டிவயல் ஊராட்சியில் உள்ள ஆக்களூர், கீழக்குறிச்சி கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இக் கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கட்டிவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
குடிநீர் சப்ளை இல்லாதது குறித்து அதிகாரிகளுக்கு பலதடவை தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடைகாலம் என்பதால் குடிநீர் தேவை அதிகமாக உள்ளது என்றார்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.