/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகர், கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை: நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் அவதி
/
ராமநாதபுரம் நகர், கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை: நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் அவதி
ராமநாதபுரம் நகர், கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை: நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் அவதி
ராமநாதபுரம் நகர், கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை: நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் அவதி
ADDED : மே 10, 2024 04:39 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2009 முதல் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுபோக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கிராமங்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இருப்பினும் பெயரளவில் தான் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிப்பு பணி, ஊருணி, கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோடை காலம் மட்டுமின்றி பொதுவாக மாவட்டத்தில் அனைத்து நாட்களிலும் மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைய வேண்டியுள்ளது.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் தண்ணீரின் அதிகரித்துஉள்ள நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சியிலிருந்து காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர், கிராமங்களில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.
இதனால் ராமநாதபுரம் நகர், அருகில் உள்ள கூரியூர், அச்சுந்தன்வயல், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் குடிநீருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். ஊருணியில் கழிவுநீர் கலக்கும் நிலையில் வேறு வழியின்றி அதனை பயன்படுத்துவதால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வசதி படைத்தவர்கள் ரூ.13க்கு ஒரு குடம் குடிநீர் வாங்குகின்றனர். ஏழை, கூலிதொழிலாளர்கள் குடிநீருக்காக தெருத் தெருவாக அலைய வேண்டியுள்ளது.
எனவே தினமும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.