/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலை செடிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் தெளிப்பு
/
கடலை செடிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் தெளிப்பு
கடலை செடிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் தெளிப்பு
கடலை செடிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் தெளிப்பு
ADDED : ஜன 09, 2024 12:13 AM

கமுதி ; -கமுதி அருகே கிராமங்களில் கடலை விவசாயத்திற்கு தண்ணீரை வீணாக்காமல் இருப்பதற்காக சொட்டு நீர் பாசனத்தில் தேவையான தண்ணீரை விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
வல்லந்தை,போத்தநதி, காக்குடி கூடக்குளம், எழுவனுார், டி.புனவாசல், வளையங்குளம், கல்லுபட்டி, நகரத்தார்குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் 2500 ஏக்கருக்கும் மேல் கடலை விவசாயம் செய்கின்றனர். பருவமழைக் காலம் என்பதால் ஊருணி, கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த ஆண்டு நெல் விவசாயத்தில் தண்ணீரில் மூழ்கி வீணாகியது. தற்போது கடலைச் செடிகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் விவசாயிகள் தண்ணீரை வீணாக்க கூடாது என்பதற்காக பல்வேறு முறைகளில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
கூடுதல் பணம் செலவு செய்து தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்காக விவசாயிகள் நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால் போதுமான தண்ணீர் கிடைப்பதாகவும், எல்லா இடத்திற்கு தண்ணீர் சீராக செல்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.