/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெயிலின் தாக்கத்தால் வெடித்தது குடிநீர் தொட்டி
/
வெயிலின் தாக்கத்தால் வெடித்தது குடிநீர் தொட்டி
ADDED : மே 29, 2025 11:12 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியம் கொதக்கோட்டை ஊராட்சி, வள்ளி மாடன்வலசையில் கடந்த ஆண்டு பொருத்தப்பட்ட 5000 லி., பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி சேதமடைந்தது.
இங்கு ஒவ்வொரு தெருவிற்கும் 5000 லி., குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிக வெப்பத்தின் தாக்கத்தால் தொட்டி தண்ணீருடன் வெடித்து சிதறி தண்ணீர் வீணாகியது. யாரும் இல்லாததால் காயம் ஏற்படவில்லை. குடிநீர் தொட்டி இல்லாமல் தற்போது சிரமப்படுகிறோம்.
குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஊராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த தொட்டி இருந்த இடத்தில் தரம் வாய்ந்த தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.