/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒன்பது ஆண்டாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
ஒன்பது ஆண்டாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ஒன்பது ஆண்டாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ஒன்பது ஆண்டாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : ஜூலை 12, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி ஊர்க்காவலன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெருவில் 2015--16ம் ஆண்டு எதிர்மறை சவ்வூடு பரவல் திட்டத்தில் தலா ரூ.6 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 8 மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.
அதன் பிறகு 9 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.