ADDED : ஜூன் 12, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வரத்து குறைவால் தர்பூசணி பழங்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.15க்கு விற்றது தற்போது ரூ.20க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுவதால் பெரும்பாலானவை வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது வெளியூர்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தர்பூசணி பழங்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் உள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.