/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடை புகையிலை விற்றால் கடைகளுக்கு சீல் வைப்போம்
/
தடை புகையிலை விற்றால் கடைகளுக்கு சீல் வைப்போம்
ADDED : ஜூன் 19, 2025 11:46 PM
திருவாடானை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்றால் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துஉள்ளனர்.
திருவாடானை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிராக போலீசார், உணவு பாதுகாப்பு துறையினருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
போதை புகையிலைக்கு ஏராளமானோர் அடிமையாகி வருகின்றனர். இதில் மாணவர்களும் அடங்குவர். எனவே புகையிலை விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் சேர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீல் வைக்கப்படும் கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. கடைக்காரர்கள் புகையிலை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.