தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 22, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சேஷய்யன் தலைமை வகித்தார். செயலாளர் ருக்மாங்கதன்,துணைத் தலைவர்கள் கோவிந்தன், விஸ்வநாதன், நாகநாதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கணேஷ் பாபு வரவேற்றார்.

பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் பேசினார். அப்போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் தறி கூலியை காசோலைமூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற கைத்தறி இயக்குனரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

பரமக்குடியில் கைத்தறிநெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரிபேட் நிலுவைதொகையை முழுமையாகஉடனடியாக வழங்க வேண்டும். ஜவுளி விற்பனைக்கு வழங்கும் ரிபேட் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கைத்தறி இயக்குனரை உடனடியாக துறையை விட்டு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நெசவாளர்களுக்கான மாத ஓய்வூதிய ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள், அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

துணைச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கை மனு பரமக்குடி உதவி இயக்குனர் சேரனிடம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us