/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்
/
பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 07, 2025 01:48 AM

திருவாடானை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. வல்மீகநாதர், பிரியாவிடையுடன், பாகம்பிரியாள் அம்மன் திருமண அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணிகண்டன்குருக்கள், வல்மீகநாதகுருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
மே 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் வெள்ளி ரிஷபம், நந்தி சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.