ADDED : ஜன 16, 2025 04:56 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரத்தில் 27ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது. லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே பொங்கல் வைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. உறியடித்தல், ரங்கோலி, கோலப்போட்டி, வரவேற்பு நடனம், கபடி போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்டவைகள் நடந்தது.
மாலையில் பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் எஸ்.வி.முருகேசன் தலைமை வகித்தார். லட்சுமிபுரம் பத்திர எழுத்தர் குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் வார்டு கவுன்சிலர் முனியசாமி வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பத்திர எழுத்தர் டிட்டோ, ராஜேந்திரன், மதிவதனன், செல்வராஜ், மோகன்ராஜா, ஜெயதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கீழக்கரை லட்சுமிபுரம் விளையாட்டு குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு போட்டி
ராமநாதபுரம் அருகே வழுதுார் கிராமத்தில் பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
வழுதுாரில் உள்ள அருளொளி விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பொங்கல் அன்று விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
சிறுவர்கள், இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தயம், பாட்டிலில்தண்ணீர் நிரப்பும் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் இருபாலரும் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வழுதுார் அருளொளி மன்றத்தினர் செய்தனர்.

