ADDED : மார் 15, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கிறது.
இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சுற்றுப்புற பகுதி மக்கள் ஒரே இடத்தில் பயனடைகின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் சனிக்கிழமைக்கு பதில் மார்ச் 19(வியாழக்கிழமை) வாரச்சந்தை நடைபெறும் என ஜமாத் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
