ADDED : செப் 08, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை அருகே சிவகாமிபுரத்தில் மாவட்ட முத்தரையர் சங்கம் மற்றும் கீழக்கரை தாலுகா பேரரசர் கல்வி அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மேல்மட்ட குழு தலைவர் கோவிந்தன் முன்னிலை வைத்தார். பேரரசர் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முருகானந்தம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டி, நிர்வாகிகள் செல்வம், ஆர்.சி.செல்வம், முருகன், நாகராஜன், கணேசன், தங்கராஜ், ஜெகதீஷ், பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிழக்கு மங்களேஸ்வரி நகர் செல்வம் நன்றி கூறினார்.
