/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரத்தில் வீடு இடிந்த நெசவாளருக்கு நலத்திட்ட உதவி
/
எமனேஸ்வரத்தில் வீடு இடிந்த நெசவாளருக்கு நலத்திட்ட உதவி
எமனேஸ்வரத்தில் வீடு இடிந்த நெசவாளருக்கு நலத்திட்ட உதவி
எமனேஸ்வரத்தில் வீடு இடிந்த நெசவாளருக்கு நலத்திட்ட உதவி
ADDED : டிச 17, 2024 03:42 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் கனமழையால் வீடு இடிந்த நெசவாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எமனேஸ்வரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நெசவாளர் கோவிந்தன். பரமக்குடி பகுதியில் பெய்த கன மழையால் இவரின் மண் சுவராலான ஓட்டு வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. இவர் எமனேஸ்வரம் கிருஷ்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து தறி நெய்து வருகிறார்.
இவரது தறிமேடை மற்றும் சுவர் சேதமானது. இதையடுத்து கைத்தறி உதவி இயக்குனர் சேரன் நெசவுத் தொழில் இழந்த கோவிந்தனுக்கு எமனேஸ்வரம் கைத்தறி குழுமம் சார்பில் நெசவுக்கருவிகள் மற்றும் பொது நிதியில் இருந்து ரூ.5000 வழங்கினார்.
உடன் கைத்தறி துறை அலுவலர்கள் நாகேஸ்வரன், பாஸ்கரன் இருந்தனர்.