/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகள்
/
ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகள்
ADDED : மே 29, 2025 11:14 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராமங்களுக்கு 1434ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. நிறைவு நாளில் காக்கூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கிராம கணக்குகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
பட்டா மாறுதல், புதிய மின்னணு குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட 42 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் முதுகுளத்துாரில் நடைபெற்ற ஜமாபந்தியில் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 639 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் கோகுல்நாத், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி உட்பட மண்டல துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.