ADDED : மே 16, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை மையப்படுத்தி நடந்து வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் பல்வேறு துறைகளின் பணிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
சிக்கல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை அங்கு வந்த மக்களிடம் கேட்டறிந்தார். சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, கடலாடி தாசில்தார் முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதில் வருவாய் துறை மூலம் 10 பேருக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணை, 5 பேருக்கு புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் வழங்கினார்.