நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் முனீஸ்வரி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ராயல் கிளப் முன்னாள் தலைவர் ராஜேஸ்வரன், ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணியன், ஜோதி, கல்பனா, ஜான் பொன்னையா கலந்து கொண்டனர்.

