ADDED : செப் 07, 2026 09:33 PM
கமுதி: கமுதி அருகே பூதத்தான் கிராமத்தில் தர்ம முனிஸ்வரர்,ஹரிஹரபுத்திர அய்யனார், அந்தரநாச்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு விளக்கு பூஜையில் இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் 108 போற்றி மந்திரங்கள், அம்மன் துதி பாடல்கள் பாடி கூட்டு வழிபாடு செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பின் கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி நடந்தது. இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கும்பநீர் ஊற்றப்பட்டது. தர்ம முனிஸ்வரர், ஹரிஹரபுத்திர அய்யனார், அந்தரநாச்சியம்மன் பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய விதிகளில் பால்குடம், வேல்குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
