/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.4 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் சிக்கியது
/
ரூ.4 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் சிக்கியது
ADDED : பிப் 14, 2025 01:43 AM

ராமநாதபுரம்:காரில் கடத்திய, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆறு பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் சட்டவிரோதமாக திமிங்கல எச்சம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், கேணிக்கரை போலீசார் இ.சி.ஆர்., ரோடு, மேலக்கோட்டை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மதுரை பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ திமிங்கல எச்சம் இருந்தது. காரில் வந்த மதுரை, காலனி ராஜன், 60, தேனி ஜெயக்குமார், 33, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து, கார், திமிங்கல எச்சத்தை ராமநாதபுரம் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

