/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் மாயமான மீனவர் கதி என்ன: தவிப்பில் குடும்பத்தினர்
/
கடலில் மாயமான மீனவர் கதி என்ன: தவிப்பில் குடும்பத்தினர்
கடலில் மாயமான மீனவர் கதி என்ன: தவிப்பில் குடும்பத்தினர்
கடலில் மாயமான மீனவர் கதி என்ன: தவிப்பில் குடும்பத்தினர்
ADDED : டிச 10, 2025 08:01 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் 3 நாட்கள் ஆகியும் மீட்கப்படாததால் அவரது கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.
டிச.,6ல் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் அந்தோணி சிங் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து மாயமானார். கடந்த இரு நாட்களாக இங்கிருந்து ஒரு படகில் மீட்புக்குழு மீனவர்கள் தேடிச் சென்றும் அவர் மீட்கப்படவில்லை. நேற்றுடன் 3 நாட்கள் ஆகியும் அவரது கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பு, சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில்அம்மீனவரை மீட்க தவறியதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி., கடல் தொழிலாளர் சங்கத்தினர் ராமேஸ்வரம் மீனவளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.