/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டம் என்னாச்சு...
/
ஊரக கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டம் என்னாச்சு...
ஊரக கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டம் என்னாச்சு...
ஊரக கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டம் என்னாச்சு...
ADDED : ஜூலை 22, 2025 03:35 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள 50 ஏக்கருக்கு மேல் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் (நீர்வளம்) இணைக்கு திட்டம் துவங்கிய நிலையில் 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனை நடப்பு ஆண்டிலாவது செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் ஆண்டு தோறும் 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி, மிளகாய் 50 ஆயிரம் எக்டேர், சிறுதானியங்கள் 12 ஆயிரம் ஹெக்டேர், பயறுவகைகள் 6000 ஹெக்டேர், எண்ணெய்வித்து 4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடுகின்றனர்.
ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக 827 மி.மீ., என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன.
இவற்றில் ஊரக வளர்ச்சிதுறை பராமரிப்பில் உள்ள 1122 சிறுபாசன கண்மாய்களில் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் முள்செடிகள் வளர்ந்தும், குப்பை கொட்டியும் பாழாகியுள்ளன.
இது தொடர்பாக ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் புகார் கூறினர். இதையடுத்து 2023ம் ஆண்டில் 50 ஏக்கரில் உள்ள கண்மாய், ஊருணிகளை மட்டும் பொதுப்பணித்துறை (நீர்வளம்) உடன் இணைத்து பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
அம்மாதிரியான கண்மாய்களை கணக்கெடுக்க அப்போதைய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார். அதன் பிறகு அப்படியே திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் மழை பெய்தாலும் கிராமங்களில் உள்ள பாசன குளம், கண்மாய்களில் இந்த ஆண்டும் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 50 ஏக்கருக்கும் மேல் உள்ள ஊருணி, கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.