/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.ஐ., அலுவலகத்தின் திறப்பு விழா எப்போது
/
ஆர்.ஐ., அலுவலகத்தின் திறப்பு விழா எப்போது
ADDED : நவ 17, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழியில் வருவாய்த்துறை ஆர்.ஐ., அலுவலக கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது.
1975ல் கட்டப்பட்ட கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டு ஆர்.ஐ., அலுவலகம் மற்றும் குடியிருப்புடன் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டது.
ஆர்.ஐ., அலுவலகத்திற்கு உரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தனியார் வாடகை கட்டடத்தில் ஆர்.ஐ., அலுவலகம் செயல்படுகிறது.
எனவே புதிய ஆர்.ஐ., அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.