தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு எப்போது

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு எப்போது

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு எப்போது


ADDED : ஜூலை 08, 2025 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைத்த பின் மதுரையிலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் தற்போது மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.

ராமேஸ்வரத்திற்கு நீட்டித்தால் ராமநாதசுவாமி, பழநி முருகன், பொள்ளாச்சி மாசாணி அம்மன், திருச்சூர் அருகே குருவாயூர் கோயிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம், திருவனந்தபுரம் செல்லவும் வசதியாக இருக்கும். ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவக்கி 3 மாதம் ஆன நிலையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ராமேஸ்வரம் சேவா பாரதி தலைவர் சுடலை கூறுகையில், ராமேஸ்வரம் முதல் திருவனந்தபுரம் வரை ஆன்மிகம், சுற்றுலா நிறைந்த பகுதிகள் ஆகும். எனவே ராமேஸ்வரம் வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க ரயில்வே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us