/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் நியமனம் எப்போது: நேர்முகத்தேர்வு முடிந்தும் தேர்வாளர்கள் காத்திருப்பு

ADDED : ஆக 13, 2025 11:10 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடத்திற்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு முடிந்தும் பணி நியமனத்திற்காக தேர்வாளர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 44 விற்பனையாளர்கள் பணியிடத்தை நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு நவ.,ல் எழுத்து தேர்வும், ஜன.,ல் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை விற்பனையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை.
இதனால் ஒரு விற்பனையாளர் 2 கடைகளை கவனிப்பதால் விற்பனையாளர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரியான பதில் தருவது இல்லை. அரசியல் தலையீடு காரணமாக காலதாமதம் செய்வதாக தேர்வாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் பிற மாவட்டங்களைப் போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நேர்முகத் தேர்வில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என தேர்வாளர்கள் வலியுறுத்தியுனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு கூறுகையில், தேர்வாளர்கள் பட்டியல் தயராக உள்ளது. அதனை சரிபார்க்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார்.----