/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் எப்போது வரும்...! ராமநாதபுரம் புறநகர் பகுதிகளில் அவதிப்படும் மக்கள் : வளர்ந்து வரும் பகுதிகளில் போதிய பஸ் வசதி இல்ல

ADDED : நவ 28, 2025 07:39 AM
- ராமநாதபுரம்: ராமநாதபுரம் புறநகர் பகுதிகளான சேதுபதி நகர், சக்கரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மக்கள் 2 கி.மீ., நடந்து செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு காலை, மாலை மினி பஸ்கள் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் மாவட்டம் முழுவதும் நகர்புறங்களை ஒட்டிய வளர்ந்து வரும் பகுதிகளுக்கு அரசு பஸ் சேவை அதிகரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் அரண்மனை, கலெக்டர் அலுவலகம், குமரய்யா கோயில் வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. சில பஸ்கள் ஓம்சக்தி நகர், அம்மா பூங்கா வழியாக இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லை. சேதுபதி நகர், சக்கரக்கோட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கிருந்து தினமும் பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர் மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து பஸ் வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இதுவரை பஸ் வசதி இல்லை.
சேதுபதி நகர் குடியிருப்புவாசி அன்புசெல்வன் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவை ஊராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சேதுபதி நகர் கலெக்டர் அலுவலகம் வளாகத்தை ஒட்டியுள்ளது.
ஆனால் 20 ஆண்டுகளாக அப்பகுதிக்கு பஸ்கள் இயக்கவில்லை. காலை, மாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர் 2 கி.மீ., நடந்து செல்கின்றனர். இரவில் பாதுகாப்பு கருதி ஆட்டோ, டாக்சியில் வர கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். அரண்மனை--கலெக்டர் அலுவலகம் இடையே செல்லும் பஸ்சை சேதுபதி நகர் வழியாக இயக்க வேண்டும் என்றார். --