/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்துவது.. எப்போது: வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் வளம் பெறுமா
/
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்துவது.. எப்போது: வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் வளம் பெறுமா
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்துவது.. எப்போது: வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் வளம் பெறுமா
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்துவது.. எப்போது: வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் வளம் பெறுமா
ADDED : செப் 05, 2025 11:22 PM
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் மன்னர்கள் காலத்தில் இருந்து திட்ட மிடப்பட்டது. புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் காவிரி, கொள்ளிடத்தில் வீணாகும் வெள்ள நீரை வறட்சியான பகுதிகளுக்கு திருப்ப திட்டமிடப் பட்டது. மாயனுாரில் கதவணை கட்ட திட்ட மிடப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் மாயனுாரில் தென்துறை கால்வாய்த்திட்டம் என்ற பெயரில் மதகு அணை கட்டப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை முதல் எம்.பி.,யான முத்துச்சாமி வல்லத்தரசு காவிரி நீரை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங் களுக்கு கொண்டுவர வேண்டும் என பார்லிமென்டில் பேசினார்.
1958ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.189 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அப் போதைய முதல்வர் காமராஜ் தலைமையில் துவக்கவிழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பின் வந்த ஆட்சி யாளர்களால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின் மாயனுார் கட்டளை கதவணை ஜெ., காலத்தில் 2014ல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. மத்திய அரசிடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.5166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்பு 2021 ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக ரூ.6941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீரை திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி மாயனுார் கதவணையிலிருந்து புதுக்கோட்டையில் பாயும் வெள்ளாறு வரை 118.5 கி.மீ., கால்வாயும், தெற்கு வெள்ளாறிலிருந்து 109கி.மீ., கால்வாய் அமைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றுடன் இணைப்பதாகும்.
ராமநாதபுரம் மாவட் டத்தில் இருந்து 34 கி.மீ., கால்வாய் அமைத்து கிருதுமால் நதி மற்றும் குண்டாற்றுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் வளம் பெற்ற மாவட்டமாக மாறும். மேலும் ஏழு மாவட்டங்களில் 1054 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு 1 லட்சத்து 9962 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டம் தற்போது முழு வீச்சில் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்தால் மட்டுமே விரைவில் கால்வாய் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.
தற்போது முதல் பிரிவில் மிக குறைவான அளவில் பணிகள் நடந்துள்ளன. ஆண்டு தோறும் காவிரி, கொள்ளிடத்தில் இருந்து மழைக்காலங்களில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிநீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த ஆண்டும் காவிரியில் இருந்து உபரி நீர் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
ஆண்டுதோறும் காவிரி யில் இருந்து உபரியாக செல்லும் நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை வறட்சியான மாவட்டங்களுக்கு திருப்பி அதன் மூலம் பயன் பெற காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இதன் காரணமாக காவிரி யில் ஏற்படும் வெள்ள நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு புறம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதையும், மறு புறம் குடிக்கவே தண்ணீர் இன்றி வறண்டும் காணப்படுகிறது. இனியாவது ஆட்சியாளர்கள் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல் படுத்த வேண்டும் என்றார்.