/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஆமை வேகத்தில் நகர்ப்புற சுகாதார நிலையப் பணி திறப்பு விழா எப்போது

ADDED : ஏப் 28, 2025 05:42 AM

பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோட்டருகில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில் திறப்பு விழா எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பரமக்குடி நகராட்சி தேசிய நகர் புற சுகாதார இயக்க திட்டத்தில் 2021--22ம் ஆண்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடந்தது. தொடர்ந்து ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்டடப் பணி மூன்று ஆண்டுகளாக நடக்கிறது.
இந்த இடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை பிரசவ வார்டு செயல்பட்டது. மேலும் நடிகை சிவபாக்கியம் என்பவர் அப்போது அரசுக்கு இந்த இடத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில் தினமலர் நாளிதழ் அடிக்கடி சுட்டிக்காட்டியது.
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் பூமி பூஜை செய்யப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டட வளாகத்தில் உள்ள ஒட்டுமொத்த கழிவு மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.