/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா எப்போது: கட்டுமானப்பணி 2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
/
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா எப்போது: கட்டுமானப்பணி 2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா எப்போது: கட்டுமானப்பணி 2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா எப்போது: கட்டுமானப்பணி 2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
ADDED : மே 30, 2025 11:50 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் 2023ல் துவங்கியது. ஓர் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 2 ஆண்டுகளாகியும் பணிகள் ஜவ்வாக இழுத்தடிப்பதால் பழைய பஸ் ஸ்டாண்டில் குறைந்த இடவசதியுள்ள இடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பயணிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16,909 சதுர அடியில் கட்டுமான பணிகள் துவங்கியது.
ஓராண்டில் விரிவாக்கப்பணிகளை முடித்து புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அப்போதைய கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார். ஆனால் தற்போது 2 ஆண்டுகளாகியும் பணிகளை முடிக்கவில்லை. கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இட நெருக்கடியால் பயணிகள் தவிக்கின்றனர். கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் பயணிகள் பஸ் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். எனவே ஜூன் மாதத்திலாவது பணிகளை முடித்து புது பஸ் ஸ்டாண்டை திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.