/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி மினி விளையாட்டு அரங்கை மீட்பது எப்போது
/
பரமக்குடி மினி விளையாட்டு அரங்கை மீட்பது எப்போது
ADDED : மே 18, 2025 12:14 AM

பரமக்குடி: பரமக்குடி மினி விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் துணை முதல்வரிடம் சுட்டிக்காட்டி சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் 2007ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரூ.30 லட்சத்தில் கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித செயல்பாடும் இன்றி பெயரளவில் மட்டுமே இருக்கிறது.
400 மீட்டர் ஓட்டப் பாதையுடன் அமைக்கப்பட்ட இந்த அரங்கம் பரமக்குடி சுற்றுவட்ட பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து காம்பவுண்ட் சுவர், கட்டடங்கள், கழிப்பறை உருக்குலைந்துள்ளது.
தற்போது துணை முதல்வர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
இதன்படி முதுகுளத்துார், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் திறக்க அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பரமக்குடி மினி அரங்கை மீட்டெடுக்க மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மற்றும் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் விளையாட்டு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சீரமைக்க வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.