/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைமை அஞ்சலகம் வரை எப்போ தான் ரோடு போடுவீங்க; மாணவிகள், பொதுமக்கள் கேள்வி

ADDED : நவ 24, 2024 05:16 AM

பரமக்குடி: பரமக்குடி ஆற்றுப்பாலம் தலைமை அஞ்சலகம் துவங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை ரோடு எப்போது போடுவீர்கள் என நகராட்சியை நோக்கி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பரமக்குடி ஆற்றுப்பாலம் சந்திப்பு பகுதியில் தலைமை தபால் நிலையம், கூட்டுறவு வங்கி, தனியார் மருத்துவமனைகள் செயல்படுகிறது. இங்கு ஏராளமான வீடுகள், பொது நிறுவனங்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் என உள்ளது.
இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் நோக்கில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அஞ்சலகம், வங்கி, மகப்பேறு மருத்துவமனை என ஏராளமான முதியவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ஐந்து முனை ரோடு சந்திப்பு பகுதியை அடைய பிரதான வழியாக உள்ளது. இந்த ரோட்டில் அவ்வப்போது பள்ளம் ஏற்படும் போது வீடு இடித்த மணலை கொட்டுவதுடன் குப்பையை கொட்டி சீரமைக்கின்றனர். தற்போது பெய்த தொடர் மழையால் ஒட்டுமொத்த ரோட்டின் தன்மை மாறி குண்டும் குழியுமாகியுள்ளது. ஆகவே உடனடியாக ரோடு பணியை துவக்கி சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.