ADDED : நவ 26, 2026 04:53 PM

அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் இன்று (நவ.,26) மதியம் 2:00 மணிக்கு உணவு இடைவேளை நேரத்தில் அரசு ஊழியர்கள் விசில் அடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் கோஷங்கள் முழங்கப்பட்டது. சங்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., சாந்தி, நிர்வாகிகள் அலெக்ஸ், மகேஷ், மலைராஜ் உட்பட ஏராளமான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு கோஷத்திற்கும் ஊழியர்கள் தயாராக வைத்திருந்த விசில்களை ஊதினர்.
எங்கள் கோரிக்கை விசில் சத்தம் அரசுக்கு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
