/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூன்று விவசாயிகளை கடித்த காட்டுப் பன்றிகள்
/
மூன்று விவசாயிகளை கடித்த காட்டுப் பன்றிகள்
ADDED : டிச 17, 2024 03:45 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பன்றிகள் மூன்று விவசாயிகளை கடித்தன.
பரமக்குடி அருகே பாம்பூர் கிராமம் முத்துராமலிங்கபுரம் பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சந்தோஷ், தினேஷ் ராஜன், சீனிவாசன். இவர்கள் நேற்று காலை அப்பகுதியில் தங்கள் நெல் வயலில் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கூட்டமாக சில காட்டுப்பன்றிகள் இரை தேடி வந்துள்ளன. அவற்றை மூவரும் விரட்ட முயன்ற போது மூவரையும் அந்த காட்டுப்பன்றிகள் கடித்தன.
இதில் தினேஷ் ராஜன் மற்றும் சீனிவாசன் பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள், மான் உள்ளிட்ட வன விலங்குகளால் தொடர்ந்து பயிர்கள் சேதம் அடைகிறது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையில் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
வனச்சரக அலுவலர் அன்பரசி கூறுகையில், அதிக மழையால் காட்டுக்குள் வாழும் காட்டுப்பன்றிகள் வெளியில் வந்திருக்கலாம். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.