/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்
ADDED : ஜன 11, 2025 06:24 AM
கமுதி : கமுதி அருகே தொட்டியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி அருகே தொட்டியபட்டி கிராமத்தில் 1000 ஏக்கரில் நெல், சோளம், மிளகாய் உள்ளிட்ட விவசாயம் செய்துஉள்ளனர்.
மழைக்கு பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இரவில் காட்டுப்பன்றிகள் முழுமையாக சேதப்படுத்தின. விவசாயி துரைப்பாண்டி கூறுகையில், தொட்டியபட்டி கிராமத்தில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.