/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
/
பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
ADDED : ஜன 07, 2026 05:34 AM

கமுதி: கமுதி அருகே பாக்குவெட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி அருகே பாக்குவெட்டி அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தற்போது பருவமழை குறிப்பிட்ட அளவு பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கமுதி அருகே பாக்குவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறுதானிய பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.இந்நிலையில் ஒரு சில நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் பாக்குவெட்டி கிராமத்தில் சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவது தொடர் கதையாகவே உள்ளது. நடப்பு ஆண்டில் ஒரு சில விவசாயிகள் சிறுதானிய விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.வரும் காலத்தில் காட்டுபன்றிகள் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

