/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் வேதனை
/
கமுதி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் வேதனை
கமுதி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் வேதனை
கமுதி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் வேதனை
ADDED : டிச 30, 2024 08:03 AM

கமுதி : கமுதி அருகே சாத்துார் நாயக்கன்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், மிளகாய் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சாத்துார் நாயக்கன்பட்டி கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் 200 ஏக்கரில் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல்,மிளகாய் பயிர்களை காட்டுப்பன்றி சேதப்படுத்துகிறது.
விவசாயி வேலுச்சாமி கூறியதாவது, கடந்த சிலஆண்டுகளாகவே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் சிலர் விவசாயத்தை விட்டு விட்டு வெளியூர் வேலைக்கு சென்றனர். சில விவசாயிகள் மட்டும் விவசாயம் செய்கின்றனர். அவ்வப்போது பெய்த மழைக்கு பயிர்கள் வளர்ச்சி அடைந்தது சிலநாட்களில் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. பலமுறை புகார் அளித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயத்தையே விட்டுவிட்டு வெளியூர் வேலைக்கு செல்கின்றனர். என்றார்.
விவசாயி மாரிசாமி கூறியதாவது, நடப்பாண்டில் போதுமான மழை இல்லாமல் மிளகாய் செடிகள் முளைக்காமல் வீணாகியது. காலம் தவறி பெய்த பருவமழையால் கமுதி அருகே தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி செடிகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. நன்கு விளைச்சல் அடைந்துள்ள நெல் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து வருகிறது. இரவு நேரத்தில் விவசாய நிலத்திலே தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.அங்கு குழாய் அமைத்து நாய்கள் குரைப்பது போல் ஒலிக்க செய்து காட்டுப்பன்றி விரட்டி வருகின்றோம். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.